பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 155

இராவணன் அடிபட்டுக் கிடக்கும்பொழுது அவ்வுடலைக் கண்ட இராமன் அவன் புறமுதுகில் புண்பட்டு விழுந்தானே என்று வருந்துவதாகவும், அதனைக் கண்ட வீடணன் 'ஐய, சீரிய அல்ல செப்பலை" என்று கூறி, இராவணன் புறமுதுகில் ஏற்பட்டு இருப்பது புண் அல்ல என்றும், திக்கு யானைகளின் தந்தங்கள் ஒடிந்து உள்ளே இருப்பதன் அடையாளமே என்றும் கூறினதாக ஒரு பகுதி வருகிறது. அதை நினைவூட்டுகின்ற முறையில் 'பாண்டியன் பரிசில் கதிர்வேல் மன்னன் இறந்த காட்சி பேசப்படுகிறது. இப் பகுதியின் உட்பொரு ளோடு மட்டுமல்லாம்ல் கவிதையின் நடையும், ஓசையுங்கூடக் கம்பனை நினைவூட்டுவனவாக அமைந். துள்ளன.

அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை அருமார்பில் முன்தோளில் ஏற்ற தின்றித் தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற சேதி யினை இவ்வையம் கேட்ட துண்டோ? எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற இளவேழ காட்டரசன், இரக்க மிஞ்ச; 'மனைவிளக்கே, கின்துணைவன் கதிரை வேலன் வாட்போரை என்னோடு நிகழ்த்துங் காலை,

முகமறைத்த ஒருதீயன் எவனோ பின்னே முடுகிவந்து கடுமுதுகில் எறிந்தான் ஈட்டி!