பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ைஅ. ச. ஞானசம்பந்தன்

திகைத்தேன்கான் சாய்ந்தான் அம் மறவோர் மன்னன் திகழிமய மலையோலும் அவன்கொண் டுள்ள புகழ்க்கென்ன? உன்குடிக்கு வாய்த்த மானம் போனதெனப் புலம்புவதும் என்ன? பெண்ணே! அகத்துன்பம் நீங்கியிரு செல்க உன்றன் அரண்மனைக்கே' என்றுரைத்தான்; சென்றாள் பெண்ணான்

தொல்காப்பியத்தில் ேப ச ப் .ெ ப று ம் எண் சுவைக்கும் எடுத்துக்காட்டுத் தரும் முறையில், 'பாண்டியன் பரிசில் பல பாடல்கள் உள்ளன. வீரச் சுவைக்கு 5-ஆம் இயலின் நான்காவது பாடலையும், 'பெருமிதச் சுவைக்கு 29-ஆம் இயலின் முதலாவது பாடலையும், "அவலச் சுவைக்கு' 38-ஆம் இயலின் நான்காவது பாடலையும், 'அச்சச் சுவைக்கு 49-ஆம் இயலின் மூன்றாவது பாடலையும், "இளிவரல் சுவைக்கு 57-ஆம் இயலின் பதினொன்றாம் பாடலையும், நகைச் சுவைக்கு 87-ஆம் இயலின் மூன்றாம் பாடலையும் எடுத்துக்காட்டலாம்.

இனி இறுதியாகக் காணவேண்டிய பகுதி பாரதி தாசனின் நாடகங்கள் என்ற பகுதியே ஆகும். 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நூல் அவருடைய மிக இளமைக் காலத்தில் இயற்றப்பட்ட தாகும். இந் நாடகம் பாவேந்தர் திராவிடக் கட்சியில் சேர்ந்து, அதில் முற்றிலுமாக மூழ்கியிருந்த நிலையில் ஆரிய- திராவிடப் போராட்டத்தை வெளியிடுவதற்குக் கருவியாகக் கொண்ட ஒரு நாடக்ம் ஆகும். எனவே, இதனைப் பிரசார நாடகம் என்று