பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 151

சொல்லலாமே தவிர, நா ட க ப் பாணிக்குரிய சிறப்பு அதிகம் இருப்பதாகச் சொல்லமுடியாது. இதனையல்லாமல் பாரதிதாசன் நாடகங்கள் என்ற பெயரில் நான்கு சிறு நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகத்திற்குரிய இலக்கணமோ சூழ்நிலையோ எவையும் இந் நூல்களில் காட்சி அளிக்கவில்லை. பாவேந்தர் பொழுதுபோக்கிற்காக இவற்றை இயற்றியிருத்தல் வேண்டுமென்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உண்மையில் நாடகம் எழுதவேண்டு மென்று அவர் முயன்று எழுதியது "பிசிராந்தையார்" என்ற நாடக நூலாகும். இந்த நூலும் இவர் கினைத்த வெற்றியைத் தரவில்லை. பிசிராந்தையார் என்ற சங்கப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு கற்பனை நாடகமாக இது ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னர்க் கூறியபடி நாடக இலக்கணம் எதற்கும் அதிகம் ஒத்துவாராமல், சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளையும் போராட்டங்களையும் ஓரளவு அறிவிக்கின்ற கருவி யாக அமைகின்றதே தவிர வேறு சிறப்பு ஒன்று மில்லை. நாடகத்திற்கு உயிர்நாடியாக இருக்க வேண்டிய முரண்பாடு எதுவும் இதில் இல்லை. பாத்திரப் படைப்பிலும், பாத்திரங்களின் வளர்ச்சி யிலும் எவ்விதமான தனிச் சிறப்பும் இல்லை.

ஒருவாறு அவருடைய நூல்கள் பலவற்றையும் ஒரு கண்ணோட்டம் விட்ட நிலையில், பாவேந்தரின் நிலை இன்றைய உலகில் என்ன என்ற வினாத் தோன்று கிறது. ஈடு இணையற்ற கவிஞராகிய அவர் ஒரு கவிஞனுக்குரிய கற்பனை வளம், சொல் வளம், ஓசை