பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 அ. ச. ஞானசம்பந்தன்

நல்லோர்கள் எல்லோரும் கொள்ளாத பொல்லாத
சொல்லோதி மல்லாடி நிற்கிறீர்- தீய
சொல்லோதி மல்லாடி நிற்கிறீர்
... ... ... ... ... ...
காதலினால் வரும் தீது பழிதரும்
ஆதலினால் இது கேவலம்

தன்னைப் பெரியவனாக மதிக்கும் எவனும் தீயவை பேசக்கூடாது என்று குறள் பேசுகிறதன்றோ!

ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

எனவே, ‘நீ இங்ஙனம் பேசுவது தீது’ என்று முதலில் எடுத்துக் காட்டுகிறாள் தலைவி. ஆனால், தீமையை பற்றி அஞ்சாமல் மேலும், அவன் அவளை நெருங்கியவுடன் சுலோசனை பழிவரும் என்று எடுத்துக் காட்டுகிறாள். இரண்டு அடிகளில் கலித்தொகையும் குறளும் பொதுளக் காண்கிறோம்.

இன்னும் ஓரளவு சென்றவுடன் இந்திரசித்தன் மேலும் சுலோசனையுடன் உரையாடுகிறான். ஆனால், அந்த இடத்தில் சுவாமிகள் அவன் பண்பு முழுவதையும் படம் பிடித்துக் காட்டுகிறார். பெண்களிடம் ஒரு குறை; இரந்து நிற்பவன் மறந்தும் செய்யக்கூடாதது ஒன்றுண்டு. அதுவே அவளுடைய பிறந்த இடத்தைக் குறைத்துப் பேசுவதாகும். தன் தாய் தந்தையரைக் குறைத்துப் பேசும் யாரையுமே ஒரு பெண் மன்னிக்க மாட்டாள். அப்படியிருக்கப் புதிதாக ஒருத்தியின் அன்பை வேண்டி நிற்கும் ஒருவன் அவளுடைய தந்தையை இழித்துப் பேசினால் அவனைவிட மமதை அல்லது