பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 21

பிள்ளை, கவிச்சக்கரவர்த்தி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ற மூவருமே 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்கள் ஆவர்.

20-ஆம் நூற்றாண்டின் கவிஞர்கள் என்ற காரணத்தாலும், புரட்சிக் கவிஞர்கள் என்று பாரதியும் பாரதிதாசனும் பெயர் சூட்டப் பெற்ற காரணத்தாலும் புதிய புதிய கவிதைகளையும் பாடல் முறைகளையும் கையாண்ட காரணத்தாலும், இவர்கள் மூவருள்ளும் ஒரு சிறந்த ஒற்றுமை உண்டு என்பதை மறுக்க முடியாது. என்றாலும், புரட்சிக் கவிஞர்கள் என்று கூறப்பெற்ற காரணத்தால், இவர்கள் மூவரும் பழமையோடு தொடர்புடையவர்கள் இல்லையோ, இவர்கள் - பழைய இலக்கியங்களையே கல்லாமல் பாடினார்களோ என்று ஐயுற வேண்டியதில்லை.

இம் மூன்று பெருமக்களும் தமிழ் இலக்கியச் சுனையில் ஆழக் குளித்து முத்துக்கள் எடுத்ததுடன் அச்சுனையிலேயே ஆடி வளரும் பேறு பெற்றவர்கள். சிறந்த இலக்கிய இலக்கணப் பயிற்சியும் உடையவர்கள். எத்துணை இலக்கண அறிவு பெற்றவர்களும் இவர்கள் பாடல்களில் குறை காண முடியாது. குறிப்பாகப் பாரதிதாசனும், பாரதியும் புதியன புனைந்தார்கள் எனில், பழமையை நன்கு அறிந்து, வேண்டும் திருத்தம் செய்து, புதியன புனைந்தார்களே தவிரப் பழமையை அடியோடு வெருட்டிப் புதியன. புனையவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

கவிச் சக்கரவர்த்தி பாரதி 1882-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ஆம். நாள் எட்டையாபுரத்தில் திரு. சின்னசாமி ஐயர் அவர்கட்கும் இலட்சுமி