பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 25

வடமொழி, இந்தி ஆகிய மொழிகளைக் கற்ற அறிவும், வடமொழி இலக்கிய ஊற்றில் திளைத்த அனுபவமும் அவருடைய தெய்வபக்தியை வளர்ப்பதற்குக் காரணமாய் அமைந்தன.

ஒருவேளை இந்த வடநாட்டு யாத்திரையும் வடமொழிப் பயிற்சியும் இல்லாமல் இருந்திருப்பின் இவ்வளவு தூரம் பக்திப் பாடல்களை, தெய்வப் பாடல்களை அவர் பாடாமலும் இருந்திருக்கலாம். இளமையிலேயே நாடு முழுவதையும் சுற்றித் திரிந்து பார்த்த காரணத்தாலும் பிற மொழி பேசும் இந்திய நாட்டு மக்களோடு பல்லாண்டுகள் பழக நேர்ந்த காரணத்தாலும், பாரதியாரின் அறிவு, விரிந்த பரப்பும் பாங்கும் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்தியா முழுவதையும் ஒன்றாகக் காணுகின்ற ஒருமைக் கண்ணோட்டம், பரந்து பட்ட அவருடைய அனுபவத்தின் விளைவு என்று நினைக்க வேண்டியுள்ளது.

பல்வேறு வகையான சாதிகள், சமயங்கள், கடவுள் வழிபாடு, மாறுபட்ட உணவு முறை, சமுதாயப் பழக்கவழக்கங்கள் ஆகிய இவையனைத்தும் நிரம்பி இருந்தும், மனித உணர்வில், பண்பாட்டில், குறிக்கோளில் ஓர் ஒற்றுமை நிலவுவதை இந்தியா முழுவதும் சுற்றி வந்த பாரதி. இளமையிலேயே கண்டு கொண்டார். அத்துடன் அவருடைய ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி. இந்திய மண்ணில் வாழ்கின்ற மக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பினும் அவர்களுள் ஓர் ஒற்றுமை என்னும் இழை அந்தரங்கத்தில் செல்வதை அறிந்து கொள்ள உதவியது. தம்முடைய மொழியின் பெருமையையும் தாய் நாட்டின் பெருமை