பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும் பாரதிதாசனும் 31


பஞ்சத்தும் நோய்களிலும்
பாரதர் புழுக்கள் போலத்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்-கிளியே
சோம்பிக் கிடப்பாராடி

பாரத சமுதாயம் முழுவதிலுமுள்ள குறைகளைப் பேசுவது கிளிக் கண்ணிப் பாடல்கள். “தமிழ்ச் சாதி” என்ற பாடலில் அவரால் போற்றி வணங்கப்படும் தமிழும் தமிழரும் இருந்த உச்ச நிலை அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதை நினைத்து மனம் மறுகுகிறார்.

விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய கினைந்தா யெனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாக் தகத்தக மாறித்
தன்மையுந் தனது தருமமு மாயா
தென்றுமோ நிலையா யிருந்துகின் னருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத தொழிலுமே காத்துமற்
றுள்ளுறு தருமமு முண்மையு மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களிற் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே, தமிழச் சாதியை யெவ்வகை
விதித்தா’ யென்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில்,

“சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்