பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 அ. ச. ஞானசம்பந்தன்


ஆழமும் விரிவு மழகுங் கருதியும்
‘எல்லையொன் றின்மை’ யெனும்பொரு எதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலு
முயற்சியைக் கருதியும், முன்புகான் தமிழச்
சாதியை யமரத் தன்மைவாய்ந்தது” வென்
றுறுதிகொண்டிருந்தேன் ஒருபதி னாயிரஞ்
சனிவாய்ப் பட்டுந் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி யுழைத்திடு நெறிகளைக்
கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்.

“தமிழச் சாதி” மாட்டு இத்துணை உயர்ந்த, எண்ணம் கொள்வதற்குக் காரணத்தையும் ‘சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்’ என்பது முதலான அடிகளில் அவரே குறிக்கிறார். அப்படிப் பட்ட தமிழ் இனம் இன்று தரையோடு தரையாகக் கிடக்கின்ற சூழ்நிலையை நினைத்து வருந்துகிறார். குறிப்பாக இந்த ஒரு பாடலில் சினம் முதலியவற்றைக் கடந்து நிற்கின்ற கவிஞன் மனம் பச்சாத்தாபம் என்ற உணர்ச்சியால் உந்தப்பெற்று அந்த உணர்ச்சி யின் சிகரத்தில் நின்று பாடுவதைக் காணமுடிகிறது.

இங்ங்னம் தமிழச் சாதியினிடத்தும் இந்தியர்களாகிய மக்களிடத்தும் உள்ள குறைகளை உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காண் முடிந்த பிறகு அவருடைய மனத்தில் வெள்ளையர் மாட்டுக் கொண்டிருந்த வெறுப்புக் குறையத் தொடங்கியதை அறிகின்றோம். நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் நம்முடைய அறியாமை, கல்வியின்மை, மூட நம்பிக்கைகள், பைத்தியக்காரப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கையின்மை, உறுதியின்மை