பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும் பாரதிதாசனும் 33


ஆகியவையே என்பதை நன்கு உணர்ந்த பின்னர்க் கவிஞருடைய மன வளர்ச்சியில் புதியதொரு திருப்பத்தைக் காண்கின்றோம். அடிப்படையாக இந்தக் குறைகளைப் போக்கினாலொழியச் சுதந்திரம் வாராது என்பதை ஏறத்தாழ இதே காலத்தில் மகாத்மா காந்தியும் உணர்த்தத் தொடங்கினார்.

இந்த உண்மையை நன்கு அறிந்துகொண்ட பின்னர்க் கவிஞருடைய மனம் இவற்றைப் போக்குகின்ற முறையில் கவிதைகள் புனையத் தொடங்கியது. நாட்டுப் பாடல் பாடிக்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் நாட்டின் அவல நிலையைப் போக்குவதற்கு நம்மை நாமே நம்பிக் கொண்டு இருக்கவேண்டுமென்ற எண்ணம் உறுதிப் பட்டு, அதற்கு உறுதுணையாகக் கடவுளுடைய அருளும் வேண்டுமென்று நினைக்கின்ற புதிய மனம் பான்மை தோன்றத் தொடங்கியதையும் ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ என்ற பாடல் மூலம் அறிகின்றோம். உள்ளத்தை உருக்கும் இப்பாடலில்,

பஞ்சமு கோயுகின் மெய்யடி யார்க்க?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுக்தன குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென் றருள்செய்யுங் கடமையில் லாயோ?
ஆரிய யுேகின் அறமறந் தாயோ?
வெஞ்செய லரக்கரை வீட்டிடு வோனே!
வீர சிகாமணி ஆரியர் கோனே

என்ற பகுதி கவிஞன் பெற்ற புதிய மன நிலையை நமக்குக் காட்டுகிறது.