பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 அ. ச. ஞானசம்பந்தன்


1910ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பாரதியின் ஏற்பாட்டின் படி அரவிந்தர் புதுவை வருவதும், அவரோடு கவிஞர் நெருங்கிப் பழகுவதும் கவிஞருடைய வளர்ச்சியில் மூன்றாவது திருப்ப மாகும். 1908-இல் இருந்து 1910 வரை உள்ள இரண்டு ஆண்டுகளில் ‘சுதேச கீதங்கள்’, “ஜென்ம பூமி” என்ற இரண்டு தொகுப்புகளில் கவிஞனின் நாட்டுப் பாடல்கள் அனைத்தும் வெளிவந்து விடுகின்றன. .

கீதை மொழிபெயர்ப்பும், “கண்ணன் பாட்டு”, “குயில்பாட்டு”, “பாஞ்சாலி சபதம்” ஆகிய அனைத்தும் 1912 என்ற ஒரே ஆண்டில் வெளிவந்தன என்றால் 1910 ஆம் ஆண்டு பாரதிக்கும் 1912 ஆம் ஆண்டு பாரதிக்கும் இடையேயுள்ள கடலனைய வேற்றுமையைக் காண முடிகிறது. இந்த வேறு பாட்டிற்குக் காரணம் 1910ல் ஏற்பட்ட அரவிந்தரின் சேர்க்கையே ஆகும் என்று நினைப்பதில் தவறில்லை. கீதை, உடநிடதங்கள், வேதங்கள் என்பவற்றில் அரவிந்தர் வந்த பிறகு மூழ்கியிருந்ததாகவும் அறிகிறோம். பக்திப் பாடல்கள் என்று சொல்லப் பெறுகின்ற “விநாயர் நான்மணி மாலை”, “தோத்திரப் பாடல்கள்”, “வேதாந்தப் பாடல்கள்” என்பவையும் “குயில் பாட்டு”, “கண்ணன் பாட்டு”, “பாஞ்சாலி சபதம்” ஆகியவையும் 1912க்குப்பின் தோன்றினவென்றால், தேசபக்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பாடல்கள் பாடி, தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பி நிமிர்ந்து நிற்குமாறு இபதேசம் செய்த பாரதியாரை - புற நோக்கிலேயே வாழ்நாளைக் கழித்த பாரதியாரை- திசை திருப்பி