பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும் பாரதிதாசனும் 35


அக நோக்கில் செலுத்திய பெருமை மகான் அரவிந்தரைச் சாரும் என்று தெரிகின்றது.

இந்தத் தொடர்புமட்டும் அல்லாமல் சித்தர்கள் பலருடைய தொடர்பும் பாண்டியில் கவிஞருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவேண்டியுள்ளது. நாட்டு விடுதலைக்காக உயிரையே கொடுக்கவேண்டு மென்று பாடிய பழைய பாரதி, புதிய “ஆத்தி சூடி”யில் ‘ஆண்மை தவறேல்’ என்றும், ‘கொடுமையை எதிர்த்து நில்’ என்றும், ‘நையப்புடை’ என்றும், ‘வெடிப்புறப் பேசு’ என்றும் பாடிய பாரதி திடீரென்று மரணத்தை வெல்லும் வழியையும். பொறுமையின் பெருமையும், சினத்தின் கேட்டையும் மிக விரிவாகப் “பாரதி அறுபத்தாறு” என்ற பகுதியில் பேசத் தொடங்கிவிடுகிறார்.

அச்சத்தை வேட்கைகளை அழித்து விட்டால்
அப்போது சாவு மங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரண மில்லை.
துச்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்த தெலாங் கடவுளெனச் சுருதிசொல்லும்
கிச்சயமா ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தி கெஞ்சில்.

என்றும்,

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய