பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 37

காணும்போது, இது கவிஞன் உள்ளத்தில் காணப் பெறும் முரண்பாடு (Inconsistency) என்று பலர் பேசக் கேட்கிறோம். கவிஞனுடைய உள்ள வளர்ச்சியை நன்கு புரிந்து கொள்ளாமையால் இப்பிழையாட்டைச் செய்கின்றோம். இந்த வளர்ச்சி மட்டும் இல்லாமல் இருந்திருக்குமேயானால் பாரதியின் கவிதைகள் காலத்தை வென்று நின்று நிலவுமா என்பது ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகும். பாரதியின் நாட்டுப் பாடல்களின் கவிதைச் சிறப்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும், இன்னும் நூறாண்டுகள் கழித்து இப்பாடல்கள் இலக்கியம் என்ற பெயருடன் நிற்கமுடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வளர்ச்சி ஏற்படுவதற்குரிய காரணத்தையும் முன்னர்ச் சுருக்கிக் கூறினோம்.'

மகான் அரவிந்தர் வங்காளத்திலிருந்து வந்தவர் என்பதும், வங்காளம் சக்தி வழிபாட்டில் புகழ் பெற்றது என்பதும், அரவிந்தர். தமிழ்நாட்டில் அதிகம் நிலைகொள்ளாத அந்தச் சக்தி வழிபாட்டு முறையைப் பாரதிக்கு அறிவுறுத்தியிருக்கவேண்டு மென்பதும் நினைக்கத் தோன்றுகிறது. இந்த ஒரு தொடர்பே பாரதியின் மனம் மாறப் போதுமானது ஆகும். என்றாலும், கவிஞனின் ந்ல்ல காலம் சித்தர்கள் பலரைச் சந்திப்பதோடு அல்லாமல் அவர்களுடைய உண்மை வடிவை அறிந்துகொள்ளவும், அவர்களோடு பழகவும் அவர்களுடைய உபதேசத் தைப் பெறவும் வாய்ப்புக்கூட இருந்திருக்கிறது. குறிப்பாகக் குள்ளச்சாமி என்ற அழுக்கு மூட்டைச் சாமியின் நட்பு, பாரதியின் மாற்றத்திற்குப் பெருங். காரணமாய் அமைந்திருந்தது என்று அறியமுடிகிறது.