பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அ அ. ச. ஞானசம்பந்தன்

குள்ளச்சாமியின் புகழ், யாழ்பாணத்துச்சாமி, குவளைக் கண்ணன், மாங்கொட்டைச் சாமி என்ற பெரியார்களுடைய புகழைப் பாடிக்கொண்டே வருகின்ற பாரதியார் திடீரென்று * பெண் விடுதலை', 'தாய் மாண்பு', 'காதலின் புகழ்', 'விடுதலைக் காதல்’ என்பவற்றை இடையே பாடி அவற்றை முடிக்காமல், அடுத்துச் "சர்வ் மத சமரசம்' என்ற தலைப்பில் கோவிந்தசாமியோடு நிகழ்ந்த உரையாடல்களையும் அவர் தமக்குச் செய்த மெய்ஞான உபதேசம் ஆகியவற்றையும் ஒரே பாடலில் பாடியுள்ளார்.

இப்பகுதிக்குப் பாரதி அறுபத்தாறு’ என்ற தலைப்பைப் பிற்காலத்தில்தான் தந்திருக்கவேண்டு மென்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரே பகுதியில் கடவுள் வாழ்த்து, சித்தர் வாழ்வு, பெண்கள் விடுதலை, ஞான உபதேசம் என்பவை இடம் பெறுமேயானால், இதைவிட அக் கவிஞனுடைய மன வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி வேறு இருத்தல் இயலாது. முன்னர்க் கூறியபடி அரவிந்தருடைய உபதேசமும், சித்தருடைய உபதேசமும் ஒன்றாகக் கலந்து பாரதியை உருவாக்கி யிருக்கின்றன என்பதற்கு இப்பகுதியே எடுத்துக் காட்டாகும். - .

சமுதாயத்தில் காணப்பெறும் மூட நம்பிக்கைகள் சாதிவெறி என்பவற்றைத் தேச பக்திப் பாடல் பகுதியைவிட வேதாந்தப் பாடல்களைப் பாடும் பொழுதும் இவர் சாடினார். இஃது எம்முடைய மூதாதையர் காலத்திலிருந்தே வருகின்ற சிறந்த பழக்கம் என்ற பெயரில் நடமாடும் நம்பிக்கைகளைத்