பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அ. அ. ச. ஞானசம்பந்தன்

மூத்தவர் பொய்க்கடையும்- இள. மூடர்தம் கவலையு மவள்புனைந்தாள்

என்ற முறையிற் பாடிச் செல்கிறார். பழமை என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் பைத்தியக்கார நம்பிக்கைகளை மூட பக்தி', 'ஜாதிக்குழப்பம்', 'ஜாதி பேத விநோதங்கள்' என்ற தலைப்புகளில் கட்டுரை களிலும் சாடுகின்றார். ஜாதிக் குழப்பம் என்ற கட்டுரையில் கடையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுவைபட வ்ருணிக்கின்றார். பிராமணன் ஒருவன் தன் தொழிலை விட்டு யானைப் பாகனாக மாறிச் சங்கர நயினார் கோவில் யானையைப் பராமரிக்கும் தொழிலில் அமர்ந்திருந்தான். அவன் தன் :பானையைப்பற்றிப் பேசும்போது 'இந்த யானை கீழ்ச்சாதி யானை, யானைகளில் பிரம்ம, கடித்திரிய, வைசிய, சூத்திர யானைகள் என்று நான்கு முக்கிய ஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளை வகுப்புக்கள் இருக்கின்றன. அவற்றுள் இது 'சூத்திர ஜாதி யானை' என்று கூறினானாம். இதை எடுத்துக் கூறும் கவிஞர் மனிதர்கள் மனத்தில் ஆழப் பதிந்து விட்ட இந்த ஜாதிக் கொள்கை காரணமாக யானை, குதிரை, ஆகாயத்திலுள்ள கிரகங்கள், இரத்தினங்கள் என்பவற்றிற்கூட ஜாதி பிரிக்கும் அளவிற்குச் சென்று விட்டது என்று கூறி வருந்துகிறார்.

'கண்ணன் என் தந்தை' என்ற பாடலில்,

பிறந்தது மறக்கு லத்தில்;- அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்கு லத்தில்; சிறந்தது பார்ப்பன ருள்ளே;- சில செட்டிமக்க ளோடுமிகப் பழக்கமுண்டு;