பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 41

கிறந்தனிற் கருமை கொண்டான்;- அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்; துறந்த நடைகளுடையான்;- உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.

நாலு குலங்க ளமைத்தான்;- அதை காசமுறப் புரிந்தனர் முட மனிதர்; சில மறிவு கருமம்- இவை சிறந்தவர் குலத்தினிற் சிறந்தவராம்; மேலவர் கீழவ ரென்றே - வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் இன்று பொசுக்கிவிட்டா லெவர்க்கும் நன்மையுண் டென்பான்

←ᎢᏛjᎢ வரும் பகுதிகள் சமுதாயத்தின் இந்த அவகேட்டைக் கண்டு நொந்து பாடியனவாம்.

சமுதாயத்தில் காணப் பெறும் குறைபாடுகளைக் கண்டு உளம் நைந்துதான் இத்தகைய பாடல்களைக் கூறியுள்ளார். என்றாலும், இவற்றைப் படிக்கும் பொழுது வெறும் சமூக சீர்திருத்தவாதியின் கூற்றுக் களாக இவை காணப்படவில்லை. அதன் மறுதலை யாக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்ந்து மக்கட்கு அதனை உபதேசிக்கத் துடிக்கும் ஒரு தத்துவ ஞானியின் குரலைத்தான் இப்பாடல்களிற் கேட்க முடிகிறது.

கவிஞராய்த் தோன்றிய ஒருவர் தேச பக்தராக மாறியதையும் சமூக சீர்திருத்த நோக்கங் கொண்ட வராகப் பரிணமித்ததையும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டை அறிந்த தத்துவ ஞானியாக மலர்ந்ததையும்