பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 е и т. ஞானசம்பந்தன்

இறைவனுடைய இலக்கணத்தை உணரும் சித்தராக. மாறினன் தயும் வரிசையாக ஒரளவு காண்டல் பயனுடையதாகும்.

இவற்றில் முதல் மூன்று தோற்றத்தையும் இது வரை ஒருவாறு கண்டோம். சித்தர்களுடைய தொடர்பு பெற்ற கவிஞர்- எங்கும் ஒர் இறைவனே உள்ளான், பல்வேறு சமயங்களிலும் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை என்ற முடிவையும் அறிந்த, துடன் மட்டுமல்லாமல் உணரவும் செய்கிறார்.

சொல்லினுக்கு அரியனாய்ச் சூழ்ச்சிக்கு அரியனாய் பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை, உள்ளுயி ராகி உலகங் காக்கும் சத்தியே தானாம் தனிச்சுடர்ப் பொருள்

(வி. நா. மாலை-12).

யான் எனது அற்றார் ஞானமே தானாய் முத்தி நிலைக்கு முலவித் தாவான் .

(வி. நா. மாலை-11)

என்ற முறையில் இறைப் பொருளை விளக்கிட முற்படுகின்றார் கவிஞர்.

அறிவினால் முயன்று பார்த்தாலும் காணுதற்கு எட்டாத பரம்பொருள் அருள் வடிவினனாக உள்ளான் என்ற பேருண்மையை, -