பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 43

அறிவா கியகோ யிலிலே அருளா கியதாய் மடிமேல் பொறிவே லுடனே மிளிர்வாய்

(முருகன் பாட்டு-5)

என்றும்- அவன் யாவரினும் மேம்பட்டவன், அனைவருக்கும் அறிவு கொளுத்துபவன் என்ற உண்மையை, -

யாவருக் கும்தலை யாயினான்; மறை, அர்த்தம் உணர்த்தும்கல் வாயினாள்

(முருகன் பாட்டு-3) என்றும் கூறுகிறார்.

இறைப் பொருள் பேராற்றல் வடிவாக இருக் கின்றது என்ற பேருண்மையினைப் பல்வேறு வகை யாகப் பேசிச் செல்லும் கவிஞர், அதே நேரத்தில் அந்த ஆற்றல் தவறான வழிகளில் செலுத்தப் பெறுவ தில்லை என்றும், தன் மாட்டு அன்பு கொண்டா ரிடத்தும் அவ்வாற்றலை மறைத்துக் கொண்டு எளிமைத் தன்மையோடு அருள் செய்யும் இயல்பு டையது என்பதையும் 'வேலன் பாட லில் அழகாக எடுத்துக் காட்டுகிறார். இறைவன் புருவத்தை வளைத்தால், அகில உலகங்களும் தவிடு பொடியாகும் என்பதை முதல் அடியில் குறிப்பிட்டு, அடுத்த அடியில் அத்தகைய பேராற்றல் படைத்த பரம்பொருள் தன் மாட்டு அன்பு செய்யும் வள்ளியாகிய குறப் பெண் ணிடம் சொக்கிப் போய் மரம்போல் நின்றுவிட்டது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். 'வில்லினை ஒத்த புருவம்' என்ற பாடலில்,