பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கு அ. ச. ஞானசம்பந்தன்

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,

வேலவா- அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி

யானது, வேலவா சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்

பாள் சிறு வள்ளியைக்- கண்டு சொக்கி- வேங்கை மரமென நின்றனை

தென்மலைக் காட்டிலே.

கல்லினை யொத்த வலியமனங்

கொண்ட பாதகன்- சிங்கன்

கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட வேலவா.

பல்லினைக் காட்டிவெண் முத்தைப்

பழித்திடும் வள்ளியை- ஒரு

முதியர் கோலங் தரித்துக்

கரந்தொட்ட வேலவா.

ஆற்றலே வடிவாகிய பொருள் தன் ஆற்றல் முழுவதையும் மறைத்துக்கொண்டு அடியாருக்கு எளியவனாகக் காட்சி தருகின்றான் என்பதில் மட்டும் பரம்பொருளில் காணப்பெறும் முரண்பாட்டைக் காட்டாமல், உ ல க த் த m iர் எவ்வெவற்றை முரண்பாடானவை என்று அடித்துக் கூறுகிறார்களோ அவை அனைத்துமே பரம்பொருளின் வடிவம் என்பதை 'வேள்விப் பாட்டு' என்ற பகுதியில் அழகாக இணைத்துக் காட்டுகிறார். உலகத்து மக்கள் ஒரு சிலவற்றை இயற்கை என்று கூறுவதும், ஒரு சிலவற்றைச் செயற்கை என்று கூறுவதும் இன்பம் என்று உரைப்பதும் துன்பம் என்று உரைப்பதும்