பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. இ. அ. ச. ஞானசம்பந்தன்

போல இவ் வண்டசராசரங்கள் அன்ைத்தும் அவற்றில் வாழ்கின்ற உயிர்களும் அவ் வுயிருக்கு உள்ளும் இருக் கின்ற உயிருமாக உறைபவன் அவனே என்ற கருத்தைக் கோமதி மகிமை' என்ற பகுதியில் இதோ பாடிக் காட்டுகிறார்:

வாழிய, முனிவர்களே,- புகழ் வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே, ஊழியைச் சமைத்த பிரான்,- இந்த உலக மெலாமுருக் கொண்ட பிரான், ஏழிரு புவனத்திலும்- என்றும் இயல்பெறும் உயிர்களுக் குயிராவான், ஆழுநல் லறிவாவான்,- ஒளி யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவர்ன். போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய் மாற்றிவாய். துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய் கனியிலே சுவையும் காற்றிலே வியக்கமும் கலந்தாற் போல நீ அனைத்திலும் கலந்தாய் உலகெலாத் தானா யொளிர்வாய், போற்றி அன்னை போற்றி, அமுதமே போற்றி - புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய், உயிரிலே யுயிராய், இறப்பிலு முயிராய் உண்டெனும் பொருளி லுண்மையாய், என்னுளே நானெனும் பொருளாய், நானையே பெருக்கித் தானென மாற்றுஞ் சாகாச் கடராய், கல்லைநோய் தீர்க்கு மருத்தின் கடலாய், பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாப்,