பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 47

யானென தின்றி யிருக்குநல் யோகியர் ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,

செய்கையாய், ஊக்கமாய், சித்தமாய், அறிவாய் நின்றிடுந் தாயே, நித்தமும் போற்றி இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி சக்தி போற்றி, தாயே போற்றி முக்தி போற்றி, மோனமே போற்றி, சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி.

இறைப் பொருளில் ஈடுபட்டு யான், எனது என்ற அகங்கார மகங்காரங்களை அம்மூலப் பொருளில் கரைத்துக்கொண்டு உலா வருகின்ற கவிஞர், பகலைக் கண்டாலும் இரவைக் கண்டாலும் தீயை கண்டாலும் இறைவனின் வடிவாகவே காண்பதில் வியப்பு ஒன்று மில்லை.

காலை யிளவெயிலின் காட்சி- அவள் கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;

நீல விசும்பினிடை யிரவிற்- சுடர்

நேமி யனைத்துமவ ளாட்சி.

இப்பாடல் காரைக்கால் அம்மையாரின் "அற்புதத் திருவந்தாதி'யில் ஓர் அழகிய பாடலை நினைவூட்டு கிறது:

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு மாலையே போன்றிலங்கும் தாழ்சடை