பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அ அ ச ஞானசம்பந்தன்

இத்தகைய பெருமக்கள் தாம் காணும் இயற்கை, செயற்கைக் காட்சிகளையும்- மக்களையும் கூடஇறைப் பொருளாகவே காணுகின்றார்கள்.

காக்கையின் கரிய நிறத்திலும் மரத்தின் பச்சை நிறத்திலும் ஒலிக்குறிப்பிலும் இறைவனையே காணு கின்ற காட்சியைக் கவிஞர் இதோ பாடிச் செல்கிறார்:

காக்கைச் சிறிகினிலே நந்தலாலா- கின்றன் கரியகிறந் தோன்றுதையே கந்தலாலா பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா- கின்றன் பச்சைகிறந் தோன்றுதையே கந்தலாலா; கேட்கு மொலியிலெல்லாம் கந்தலாலா- கின்றன் கீத மிசைக்குதடா நந்தலாலா; - தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா- கின்னைத் தீண்டு மின்பக் தோன்றுதடா நந்தலாலா.

இதனைப் படிக்கும்பொழுது நம்மாழ்வார் அருளிய 'மண்ணையிருந்து துழாவி’ என்ற பாடல் நினைவுக்கு, வருகின்றது.

மண்ணை யிருந்து துழாவி

'வாமனன் மண்ணிது' என்னும்,

விண்ணைத் தொழுதவன் மேவு

வைகுக்த மென்றுகை காட்டும்

அறியும்செந் தீயைத் தழுவி

'அச்சுதன்' என்னும்மெய் வேவாள், எறியும்தண் காற்றைத் தழுவி .

'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,