பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 49

ஒன்றிய திங்களைக் காட்டி

'ஒளிமணி வண்ணனே என்னும்

கின்றகுன் றத்தினை நோக்கி

"நெடுமாலே வா’ என்று கூவும்.

முழுமுதற் பொருளை உண்டு என்று ஏற்றுக் கொள்பவர்களுங்கூட, ஒரு நாமம், ஒர் உருவம், ஒன்றும் இல்லாத அப் பரம்பொருளுக்கு உருவும், நிறமும் கற்பித்து அதன் பயனாகப் பல்வேறு சமயங் களை வகுத்துக்கொண்டு தம்முள் சண்டையிட்டு மடிவதை இன்றும் காண்கிறோம். பரம்பொருளின் இலக்கணத்தை உள்ளவாறு அறிந்தவர்கள் இங்ங்னம் வேற்றுமை பாராட்ட வேண்டிய தேவையில்லை, நாம ரூபம் கடந்ததே முழுமுதற் பொருள் என்ற பேருண்மையை வேதம் அறிந்தவர்களே அறியாது போனது வருத்தம் தருவதாகும் என்ற பேருண்மை யைக் கவிஞர் 'அறிவே தெய்வம் என்ற பாடலில் இதோ பேசுகிறார்:

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

சுருதிகள் கேளிரோ?- பல

பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ?

வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று

வேதம் புகன் றிடுமே- ஆங்கோர்

வேடத்தை நீருண்மை யென்றுகொள். வீரென்றவ்

வேத மறியாதே.