பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ) அ ச ஞானசம்பந்தன்

காமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே- ஆங்கோர்

காமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றக்

நான்மறை கண்டிலதே.

உள்ளும் புறமுமா புள்ளதெலாந் தானாகும் வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர், பற்றிலதாய் இல்லையுள தென்றறிஞ ரென்றுமய லெய்துவதாய் வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக் கொட்டுமுகி லாயனுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய் தூல வணுக்களாய்ச் குக்குமமாய்ச் சூக்குமத்திற் சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாக் தானாகித் தன்மையொன்றி லாததுவாய்த் தானே ஒருபொருளாய்த் தன்மை பலவுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே தங்கு பலமதத்தோர் சாற்றுவது மிங்கிதையே,

இத்துணைத் தூரம் பரம்பொருளின் இயல்பைத் தம் அறிவாலும் அனுபவத்தாலும் கண்ட முறையில் விரிவாகப் பாடி வந்த கவிஞர் இறுதியாக கோவிந்த சாமி தமக்கு உபதேசம் செய்ததாகப் 'பாரதி அறுபத்தாறி'ல் கடைசி இர்ண்டு பாடல்களில் தொகுத்துப் பேசுகிறார். பொருள் ஒன்று என்றும், அந்த ஒரு பொருளுக்குப் பல்வேறு நாமங்களும் வடிவங்களும் கற்பிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த நாம ரூபங்கள் அவரவர்கள் அறிவுக்கும் அனுபவத் திற்கும் தரத்திற்கும் ஏற்ற முறையில் சமைக்கப் பெற்றுள்ளன என்றும் ஒருவர் உணர்ந்து விட்டால் சமய வேறுபாட்டைக் கடந்து, நாமரூப வேறு