பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 51

பாட்டைக் கடந்து பொருளைக் காண்டல் கூடும். அங்ங்னம் காண்பதற்கு அடிப்படை அருள் உள்ளம் ஒன்றேயாம் என்பதை எடுத்துக் காட்டுவார் போல, "ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்' என்று பேசிவிட்டு அதனை முடிக்கும் முறையில் இதோ பேசுகிறார்:

பூமியிலே கண்டமைந்து; மதங்கள் கோடி, புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம், சாமியென யேசு பதம் போற்று மார்க்கம், ஸ்காதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம், காமமுயர் சீனத்துத் 'தாவு மார்க்கம் நல்ல கண்பூசி மதமுதலாப் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல வுளவா மன்றே; யாவினுக்கு முட்புதைந்த கருத்திங் கொன்றே. பூமியிலே வழங்கிவரு மதத்துக் கெல்லாம் பொருளினைகா மிங்கெடுத்துப் புகலக் கேளாய்; சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே யஃதாம்; பூமியிலே நீகடவு ளில்லை யென்று புகல்வதுகின் மனத்துள்ளே புகுந்த மாயை, .சாமிமீ அம்மாயை தன்னை நீக்கி லதாகாலம் 'சிவோஹ மென்று ஸ்ாதிப்பாயே.

இத்துணைத் தூரம் அறிவு வளம், மன வளம், அனுபவ வளம் ஆகியவற்றைப் பெற்று முதிர்ந்த கவிஞராக வாழ்கின்ற ஒருவர் வாழ்க்கையில் ஒரு சிறந்த குறிக்கோளைப் பெற்றவராக இருந்திருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, பிறந்துவிட்ட ஒரே