பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 e அ. ச. ஞானசம்பந்தன்

என்று பேசுகிறார். இவ்வாறு கூறியிருப்பினும், பாரதியைப் பொறுத்தமட்டில் வாழ்வின் குறிக் கோளாக அவர் கொண்டது எதனை என்றால்

நமக்குத்தொழில் கவிதை, காட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோரா திருத்தல்

என்பதேயாகும். இக்கடமையை நன்கு நிறைவேற்றத் தமக்கு ஆற்றல் தரவேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கின்ற கவிஞர்,

பண்டைச் சிறுமைகள் போக்கியென்னாவிற் பழுத்தசுவைத் தண்டமிழ்ப் பாட லொருகோடி மேவிடச் செய்குவையே

என்று பாடுகிறார்.

இத்தகைய ஒரு குறிக்கோளை மனத்திற்கொண்ட கவிஞர் இறைவனை நோக்கி ‘'வேண்டும் வேண்டும்’ என்று கூறுவனவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த் தாலும் அக்கவிஞருடைய மனநிலையை ஒருவாறு அறிய முடிகின்றது.

மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் கினைக்கும்பொழுது நின்மெளன நிலைவர் திடc செயல்வேண்டும் அறம்பொருள் இன்பம்வி டெனவும் முறையே தன்னை ஆளும் சமர்த் தெனக்கு அருள்வாய் கோவு வேண்டேன் நூறு ஆண்டு வேண்டினேன் அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்