பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 55

உடைமை வேண்டேன் உன்துணை

வேண்டினேன் வேண்டாத அனைத்தையும் நீக்கி . வேண்டியது அனைத்தும் அருளுவது உன் கடனே பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன், மண்மீ துள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே இன்பமுற் றன்புட னினங்கிவாழ்க் திடவே செய்தல் வேண்டும், தேவ தேவா, ஞானாகா சத்து நடுவே நின்றுகான் 'பூமண் டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமு மிடிமையு கோவுஞ் சாவு நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன், இதனை நீ திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி "அங்ங்னே யாகுக' என்பாய், ஐயனே இந்நாள், இப்பொழு தெனக்கில் வரத்தினை அருள்வாய்.

சிறந்த குறிக்கோளுடைய கவிஞன் ஒருவனுக்கு அக்குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டுமென்று நினைக்கும் பொழுதெல்லாம் 'அச்சம்’ என்ற ஒன்று அவரைப் பற்றி அல்லலுறுத்துவதையனுபவிக்க நேரிடு கிறது. அவனைச் சுற்றியுள்ளவர்களாகிய உலகத்தார் சொல்லுகின்ற முறையில் அவனைவிட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தவர் பலர் எல்லா வகை வளங் களையும் பெற்றுச் சுகபோக வாழ்க்கை வாழ்