பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. இ. அ. ச. ஞானசம்பந்தன்

கிறார்கள். ஆனால், அவ்ர்கள் வாழ்வில் குறிக்கோள் என்ற ஒன்று மருந்துக்கும் இல்லை. கவிஞனைப் பொறுத்தமட்டிலும் வானை முட்டுகின்ற குறிக்கோள் இருக்கிறது; ஆனால், வாழ்க்கை வசதிக்கு எள ளளவும் இடமில்லை. அப்படியே வாழ்ந்தால் தன் நிலை என்ன வாகுமோ என்ற ஒரோவழி மனத்தில் அச்சமும் ஏற்படுகிறது. அத்தகைய நிலையில் மனத்தைப் பார்த்து, 'பாழும் மனமே நீ அஞ்சவே வேண்டாம். இறைவனுடைய தாள்களைச் சரண்ம் அடையவா யானால், நீ அஞ்ச வேண்டிய தேவையில்லை. இறைவன் தாளைச் சரணம் அவுடவதற்கு எவ்வளவு நீ அஞ்சினாலும் அதனால் எவ்வகையான பயனும் ஏற்படப் போவதில்லை' என்று பேசுகிறார் பாரதி.

மேன்மைப் படுவாய் மனமே கேள்

விண்ணி னிடிமுன் விழுந்தாலும் பான்மை தவறி கடுங்காதே,

பயத்தா லேதும் பயனில்லை யான்முன் னுரைத்தேன் கோடிமுறை,

இன்னுங் கோடி முறைசொல்வேன், ஆன்மா வான கணபதி

அருளுண் டச்ச மில்லையே.

இம்முறையில் மனத்தைப் பார்த்துத் தேறுதல் கூறிய வுடன், இறைவனுடைய அருள் துணைகொண்டு தான் அச்சத்தை வென்று விட்டதாகக் கவிஞன் அறிந்து கொள்கிறான். எனவே, அச்சத்தில் அமுங்குதல் இல்லை; நடுங்குதல் இல்லை; நாணுதல் இல்லை. எது நேரினும் இடர்ப்பட மாட்டோம்: அண்டம் சிதறினாலும் அஞ்ச மாட்டோம்: கடல் பொங்கி