பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 57

எழுந்தாலும் கலங்க மாட்டோம்; யாருக்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம் என்று பேசி, இறுதியில்

நெஞ்சே வாழி; நேர்மையுடன் வாழி வஞ்சக் கவலைக்கு இடம்கொடேல் மனமே தஞ்சம் உண்டு சொன்னார்கள் செஞ்சுடர்த் தேவன் சேவடி கமக்கும்

என்று அமைதி காண்கிறான். ஓயாது சலிக்கின்ற இயல்புடையதாகிய மனம் என்றும் ஒரே நிலையில் எத்துணைப் பெரியவர்கட்கும் இருந்துவிடுமென்று சொல்வதற்கில்லை. ஜீவன்முக்தர்களும் இவ்விதிக்கு விலக்கு அல்லர். ஆதலால் இவ்வளவுதூரம் உறுதிப் பாட்டிோடு அச்சத்தை அகற்றி வாழ முற்பட்ட நம் கவிஞருக்குக்கூட மனம் எனும் ஒர் பேய்க் குரங்கு திடீர் திடீரென்று புத்தி மாறி அல்லல் விளைவிக்கத் தொடங்குகிறது. எனவே, மற்றொரு முறை மனத்தைக் கெஞ்சி, 'ஏ மனமே, நான் சித்தி பெறுமாறு உன்னால் முடிந்த அளவு எனக்குத் துணை புரிவாயேயானால், தங்கத்தால் உனக்கு ஒரு கோயில் கட்டுவேன்' என்று பேசுகிறான்:

யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கு மினியனாய் வாழ்ந்திட விரும்பினேன், மனமே, நீ யிதை ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம் கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து