பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 e அ ச ஞானசம்பந்தன்

தேறித் தேறி,நான் சித்திபெற் றிடவே, கின்னா லியன்ற துணைபுரி வாயேல், பொன்னா லுனக்கொரு கோயில் புனைவேன் 1 மனமே, எனைங் வாழ்வித் திடுவாய் வீணே யுழலுதல் வேண்டா சக்தி குமாரன் சரண்புகழ் வாயே.

இவ்வாறு கெஞ்சிக் கேட்ட பின்னரும் அந்தப் பாழும் மனம் அவன் விருப்பப்படி நடவாமல் அஞ்சி அஞ்சிச் சாகின்றது. எனவே, நெஞ்சினிடம் சினந்து கீழ்வருமாறு பேசுகிறார்:

......................................நெஞ்(சே) நினக்கு யானுரைத்தன நிலை கிறுத்தி (டவே) தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன், வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன், ஏதுஞ் செய்துணை யிடரின்றிக் காப்பேன்; மூட நெஞ்சே, முப்பது கோடி முறையுனக் குரைத்தேன்; இன்னு மொழிவேன்; தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே; ஏது கிகழினும் 'நமக்கேன்' என்றிரு; பராசக்தி யுளத்தின் படியுலக நிகழும்.

இவ்வாறு மேலும் நெஞ்சோடு கூறத் தொடங்கி, காரணம் இல்லாமல் அச்சப்படுவதினாலே பயன் ஒன்றும் இல்லை என்ற கருத்தைப் பேசுகிறார்:

இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே, எதற்கு மினி யுளைவதிலே பயனொன் றில்லை; முன்னர்கம திச்சையினாற் பிறந்தோ மில்லை;