பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 0 அ. ச. ஞானசம்பந்தன்

மும்மையின் உடைமைகளும் - திரு

முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்

அம்மைகற் சிவசக்தி - எமை

அமரர்தக் கிலையி லாக்கிடுவாய்.

இதைத் தொடர்ந்து "மகாசக்தி பஞ்சக'த்தில் ஐந்து பாடல்களிலும் இறைவனுடைய திருவடியைச் சரண் அடைந்து விட்டதாகக் கூறிப் பெருமிதம் கொள்கின்றார். சரணம் அடைந்த பின்னரும் ஒரோ வழி மனம் பழைய வினை வயத்தால் புலன்கள் வழி செல்லுகின்ற கொடுமையைக் காண்கின்றார் கவிஞர். "துறவு’ என்ற அதிகாரத்தின் பின்னரே, "அவா வறுத்தல்' என்ற அதிகாரத்தை வள்ளுவப் பெருந்தகை வைத்த காரணத்தை விளக்கப் புகுந்த பரிமேலழகர் 'விடாது வருகின்ற பிறவித் தொடர்பால் பழைய வினை வயத்தால் ஒரோவழிப் புலன்கள்மேல் பற்றுச் செல்லும்; அதனையும் அறிந்து பரிகரிப்பதற்காகத் துறவு மெய்யுணர்தல் என்பவற்றின் பின்னரே அவா வறுத்தலை வைத்தார்' என்று பேசுகின்றார். அஃது எத்துணை உண்மை என்ற பேருண்மையைப் பாரதி பாடலில் காண்கின்றோம். இறைவன்மாட்டுத் தம்மை அடைக்கலமாகக் கொடுத்த கவிஞர் மறுபடியும் புலன்கள் தமக்குத் துன்பம் செய்வதைக் கண்டு உள்ளம் நைந்து இறைவனை நோக்கிக் கருணைக் கடல் ஆகிய உன்னிடத்தில் அற்பனாகிய நான் விரும்பும் இந்தச் சிறிய காரியங்கூடப் பெற முடியாதா என்று மனம் உருகி, மகா சக்திக்கு விண்ணப்பம் செய்கின்றார்.

மோகத்தைக் கொன்றுவிடு- அல்லாலென்றன்

மூச்சை நிறுத்திவிடு