பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 6t

தேகத்தைச் சாய்த்து விடு- அல்லா லதில்

சிந்தனை மாய்த்து விடு யோகத் திருத்திவிடு- அல்லா லென்றன்

ஊனைச் சிதைத்துவிடு ஏகத் திருந்துலகம்- இங்குள்ளன யாவையும் செய்பவளே. உள்ளம் குளிராதோ- பொய்யானவ

ஊன மொழியாதோ? கள்ள முருகாதோ- அம்மா பக்திக்

கண்ணிர் பெருகாதோ? வெள்ளக் கருணையிலே- இந்நாய் சிறு

வேட்கை தவிராதோ? விள்ளற் கரியவளே- அனைத்திலு

மேவி யிருப்பவளே.

இங்ங்னம் இறைப் பொருளைப்பற்றி ஓயாது பாடித் தன்னையும் அதன் மாட்டுக் கரைத்துக் கொள்கின்ற கவிஞரின் பாடல்களைக் கேட்டவுடன், "அடியார்கள் போல் கவிச் சக்கரவர்த்தி பாரதி உணர்வின் துணைகொண்டு முழுமுதற்பொருளை நாடி, அதிலேயே காலங்கழித்துவிட்ட ஒரு பக்தர் போலும் என்று நவீன உலகம் நினைந்து நையாண்டி செய்ய வேண்டிய தேவையில்லை. பாரதியின் பரந்த கல்வியறிவும், விஞ்ஞான அறிவும், பலமொழி அறிவும், ஆங்கிலப் புலமையும் நாடு அறிந்த ஒன்றாகும். மூட பக்தியும், மூடநம்பிக்கையும் நி ைற ந் தி ரு ந் த. அவருடைய காலத்தில் பேரறிஞராகிய அவர் பல்வேறு விஞ்ஞானப் புதுமைகளையும் நன்கு அறிந்திருக் கின்றார் என்பதை அறிய முடிகின்றது. இன்றைய நாள் விஞ்ஞானம் பேசும் விரிந்து செல்லுகின்ற.

List— 5