பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ) அ. ச. ஞானசம்பந்தன்

அண்டத்தைப் பற்றியும் (expanding universe) அக்கவிஞரும் அறிந்திருக்கின்றார். நம்முடைய நாடு அமைந்திருக்கும் இச்சிறிய பூமி, இதனை ஒரு துணைக் கோளாகவுடைய சூரிய ம்ண்டலம், சூரிய மண்டலத் தைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரிய மண்டலங் களையுடைய பால் வெளி, இப்பால் வெளியைப்போல் கோடிகோடி கோடியான அண்டங்களையுடைய இப்பரந்த ஆகாயத்தில் இவ்வண்டங்கள் அனைத்தும் ஓயாது சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன என்பதும்ஒன்றைவிட்டு ஒன்று பல காத தூர வேகத்தில் ஓடிக் கொண்டுள்ளன என்பதும்- சர் ஆர்தர் எடிங்ட்டன்’ போன்ற மாபெரும் விஞ்ஞானிகள் கண்டு உரைத்த புதுமைகளாகும்.

இவ்வளவு பெரிய உண்மையைக் கவிஞர் மிக எளிதாக இதோ பாடிச் செல்கிறார்:

படர்வான் வெளியில் பலகோடி கோடி கோடி பல்கோடி இடறாது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறையவனே.

இதனை இவ்விடத்தில் சுருங்கக் கூறிய கவிஞன் "கோமதி மகிமை என்ற கவிதையில் மிக விளக்கமாகத் தான் ஒரு வானுாலறிஞன் என்பதை அறிவுறுத்துகின்ற முறையில் இதோ பேசுகிறார்:

இக்கதை யுரைத்திடுவேன். உளம் இன்புறக் கேட்பீர், முனிவர்களே, கக்க பிரானரு ளால்- இங்கு கடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்;