பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 83

தொக்கன அண்டங்கள்- வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம் இக்கணக் கெவரறிவார்? புவி எத்தனை யுளதென்பதி யாரறிவார்? நக்க பிரானறிவான்;- மற்று நானறி யேன்பிற நரரறியார்; தொக்கபே ரண்டங்கள்- கொண்ட தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள்;- ஒளி தருகின்ற வானமொர் கடல்போலாம்; அக்கட லதனுக்கே- எங்கும் அக்கரை யிக்கரை யொன்றில் லையாம். இக்கட லதனகத்தே- அங்கங் கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல் தொக்கன உலகங்கள்;- திசைத் தூவெளி யதனிடை விரைந்தோடும்; மிக்கதொர் வியப்புடைத்தாம்- இந்த வியன்பெரு வையத்தின் காட்சிகண்டீர்; மெய்க்கலை முனிவர்களே- இதன் மெய்ப் பொருள் பரசிவன் சக்திகண்டீர்.

பல கோடி கோடி மைல்களைக் காணக்கூடிய தொலைநோக்கி ஆடிகளைப் பெற்றுள்ள இன்றைய நாளில்கூட இவ் வண்டங்களின் கணக்கைக் கூற, கணித்திட முடியாது என்று விஞ்ஞானம் பேசுகிறது. அக் கருத்தைத் 'தொக்க பேரண்டங்கள் கொண்ட தொகைக்கு எல்லை இல்லை; அவற்றைக் கணக்கிட்டுச் சொல்லும் திறன் எனக்கும் இல்லை; பிற மனிதர் களுக்கும் இல்லை" என்று மனிதர்களைப் பார்த்துப்