பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 0 அ. ச. ஞானசம்பந்தன்

பேசும்பொழுது கவிஞர் பேசிக் காட்டுகிறார். "மகர் சக்தி வாழ்த்து’’ என்ற பகுதியிலும்,

விண்டுரைக்க அறிய அரியதாய்

விரிந்த வான வெளியென கின்றனை, அண்டகோடிகள் வானி லமைத்தனை,

அவற்றி லெண்ணற்ற வேகஞ் சமைத்தனை, மண்டலத்தை அணுவணு வாக்கினால்

வருவ தெத்தனை யத்தனை யோசனை கொண்டதுார மவற்றிடை வைத்தனை,

கோல மேநினைக் காளியென் றேத்துவேன்.

என இதே கருத்து மறுபடியும் பேசப்படுகிறது.

எனவே, விஞ்ஞான அறிவு நன்கு நிறைந்துள்ள கவிஞர் பெருமகன் அந்த அறிவின் துணைகொண்டு பொருள்களை நன்கு ஆராய்ந்து, இறுதியில், அறிவின் துணைகொண்டு ஆராய்வதினால் பயன் இல்லை; உணர்வின் துணைகொண்டுதான் உண்மையைக் காண வேண்டும் என்ற பேருண்மையை அறிந்தவ ராய்க் கோவிந்தசாமியின் உபதேசத்தை மேற். கொள்கிறார் என்று அறிகின்றோம்.

கவிஞர் வாழ்ந்த காலம், விஞ்ஞானத்தின் துணை தமக்கு இருந்துவிட்ட காரணத்தாலும், எல்லை யில்லாச் செல்வம் கொழித்த காரணத்தாலும் ஆங்கிலேயர்கள் தங்களால் முடியாத காரியமே ஒன்றுமில்லை என்று செருக்குக் கொண்டு தங்களுடைய மொழி அறிவையும் விஞ்ஞான அறிவையும் பெற்றாலொழிய உலகத்திற்கு உய்கதி