பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 65

இல்லை என்று நினைந்து இறுமாந்து பேசிய காலமாகும். இந்நிலையில் தோன்றிய கவிஞர் பிரான் "மூன்று காதல்கள்' என்ற பகுதியில் "சரஸ்வதி காதல்', 'லட்சுமி காதல்', 'காளி காதல்’ என்று பாடிச் செல்லுகிறார். இதில் வியக்கத் தகுந்த ஒர் உண்மை இருப்பதை இப்பாடல்களைக் கற்றவர்கள் நன்கு அறிதல்கூடும். சரஸ்வதியைப் பற்றிப் பாடும்பொழுது 'அடி என்னோடு இணங்கி மணம் புரிவாய்' என்று பேசிய கவிஞர், லட்சுமி காதலில், 'நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டு கின்றேன்' என்று பேசிய கவிஞர் காளி காதவில்' வேறுவிதமாகப் பாடத் தொடங்கி விடுகிறார். லட்சுமி- சரஸ்வதி என்ற இரண்டு காதல்களிலும் இப்பெயர்கள் குறிக்கப் பெறுகின்ற தெய்வங்களைப் பற்றிப் புலவன் பாடவில்லை என்பது தெளிவு. தெய்வங்களாகக் கருதியிருப்பாரேயானால் 'ஆரத் தழுவுதல்' பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. எனவே, சரஸ்வதியை அறிவின் அடையாளமாகவும், லட்சுமியைச் செல்வத்தின் அடையாளமாகவும் கொண்டு கவிஞர் பாடுகிறார் என்று அறிய முடிகிறது என்றால், இதன் கருத்தைச் சற்று ஆழச் சிந்திக்க வேண்டும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அறிவு, செல்வம் என்ற இரண்டையும் தன் முயற்சியினாலும் இயற்கையாகவும் பெறுகின்றான் என்பது உண்மை. என்றாலும், இவ்விரண்டைப் பெறுகின்ற மனிதன் இவை தன்னால் பெறப்பட்ட பொருள்கள் என்றும் பெறுகின்ற தான்தான் தலைவன் என்றும் அறிந்து இவற்றை ஆள்வதைவிட்டு இவற்றால் தான் ஆட்