பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அ. ச. ஞானசம்பந்தன்

கொள்ளப்பெற்று இவற்றிற்கு அடிமையாகி விடு கின்றான். அறிவுக்கு அடிமையாகித் தம் நிலையை மறக்கின்றவர்களும், செல்வத்திற்கு அடிமையாகித் தம் நிலைமை மறக்கின்றவர்களும் இவ் வுலகிடை என்றும் உளர். நம்மால் ஆட்சி செய்யப்பட வேண்டிய பொருள்கள் நம்மை அடிமைப்படுத்தினால் விளை கின்ற பேராபத்துப்பற்றி ஒன்றும் சொல்லத் தேவை யில்லை. மோட்டார் வாகனத்தை நாம் செலுத்த வேண்டுமே தவிர, நம்மை அது செலுத்தத் தொடங்கினால் முடிவு அழிவு என்று சொல்லவும் வேண்டுமோ?

இந்தப் பேருண்மையைத்தான் கவிஞர் சரஸ்வதி, லட்சுமி காதல்களில் வெளியிடுகின்றார். அறிவும் செல்வமும் நம்மால் லிரும்பிச் சம்பாதித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை தாம். என்றாலும், நாம் தலைவனாக இருத்தல் வேண்டுமே தவிர அவற்றிற்குத் தலைமை தந்துவிடக் கூடாது என்ற உண்மையை விளக்குகிறார். தம்முடைய 22 வயது வரையில் அறிவையே தலையாயதாகக் கருதிச் சித்தம் தளராமல் பித்துப் பிடித்ததுபோல் பகல் பேச்சும் இரவில் கனவும் அதனிடை வைத்து அதே நினைவாகப் பிற வாஞ்சையில்லாமல் இருந்ததாகக் கவிஞரே கூறுகிறார் என்றால், பல்வேறு மொழி களையும் விஞ்ஞானப் புதுமைகளையும் கற்கின்ற பருவத்தில் இவற்றைத் தவிர வேறு வாழ்க்கையில் அடைய வேண்டிய பொருள் ஒன்றுமே இருத்தற் கில்லை என்ற கருத்தில் அறிவுக்கு அடிமையாகிக் கவிஞர் இருந்த வரலாற்றைக் காண முடிகின்றது. அதேபோல ஒயாது வறுமையில் உழல்கின்ற கவிஞருக்கு ஒவ்வொரு சமயம் பொருள் கையில்