பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 87

கிடைப்பதும் அது உடனே அழிவதும் இயல்பாக

இருந்ததுபோலும். இதை மனத்தில் இருத்தி, புன்னகை செய்திடுவாள்- அற்றைப் போது முழுதும் மகிழ்ந்து இருப்பேன்; சற்று என் முன் நின்று பார்த்திடுவாள்- அந்த மோகத்திலே தலை சுற்றிடும்காண் பின்னர் என்ன பிழைகள் கண்டோ- அவள் என்னைப் புறக்கணித்து ஏகிடுவாள்

என்று பேசும்பொழுது ஒவ்வொரு சமயம் QతామేమిGu அனைத்தும் என்று கருதி வாழ்ந்த வாழ்க்கையையும் கவிஞர் நினைவுகூர்கின்றார்.

ஆனால், இறைவன் அருளால் இந்த அறியாமை விரைவில் கவிஞனை விட்டு நீங்கிவிடுகிறது. அறிவின் துணை கொண்டும் செல்வத்தின் துணை கொண்டும் பரம்பொருளைக் காண முடியாது என்ற பேருண்மை யைக் 'காளி காதலில் மிக அழகாகப் பேசுகிறார். அறிவும் செல்வமும்போல், அவை பெண்ணாகிக் கனவில் காட்சி அளித்ததுபோல், மூன்றாவது நாளும் கனவில் ஒரு பெண் வந்ததாகவும் இதுவும் கன்னி வடிவம் என்று அருகில் சென்று பார்த்தவுடன் இது அறிவு, செல்வம் என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் வடிவம் என்று அறிந்ததாகவும் அழகாகப் பேசுகிறார்:

அன்னை வடிவமடா இவள்

ஆதிபரா சக்தியடா- இவள் இன்னருள் வேண்டுமடா- பின்னர் யாவும் உலகில் வசப்பட்டு போமடா

என்றும்,