பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 0 அ. ச. ஞானசம்பந்தன்

நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா

என்றும் பாடுவது திருவண்ணாமலை வரலாற்றை நினைவூட்டுவதுபோல், அறிவும் செல்வமும் என்ற இரண்டற்கும் அப்பாற்பட்டது பரம்பொருள் என்ற பேருண்மையைக் கவிஞர் காணுமாறு செய்கிறது. செல்வத்தைக் காட்டிலும் அறிவில் அதிக ஈடுபாடும் நிறைந்த அளவும் பெற்று இருந்தாராகலின் அடிக்கடி அறிவினாலும் கல்வியினாலும் மட்டும் பயன் பெற முடியவில்லை என்ற பேருண்மையை விளக்கிக் செல்கிறார் முத்துமாரி' என்ற பாடவில்:

பல கற்றும் பல கேட்டும் பயன் ஒன்றுமில்லையடி முத்துமாரியம்மா துணி வெளுக்க மண் உண்டு தோல் வெளுக்கச் சாம்பல் உண்டு மணி வெளுக்கச் சாணை உண்டு முத்துமாரியம்மா மனம் வெளுக்க வழியிலையே -

என்று பாடிய கவிஞர்

கிலையெங்கும் காணவில்லை எங்கள் முத்து மாரியம்மா

எங்கள் முத்து மாரியம்மா கின்பாதம் சரண் புகுந்தோம்

என்று முடிக்கின்றார்.

தோத்திரப் பாடல்கள் நீங்கலாகக் கவிஞரின் உத்தியையும் புலமைத் திறத்தையும் காண வாய்ப்பு: