பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 69

அளிப்பது 'கண்ணன் பாடல்கள்’’ ஆகும். பழைய இலக்கிய மரபைக் கவிஞர் நன்கு அறிந்திருக்கிறார். பரம்பொருளைப் புருஷோத்தமன் என்றும், உயிர்கள் எல்லாம் தலைவிகள் என்றும் கருதி, நாயக- நாயகி பாவத்தில் பாடல்கள் எழுதுவது பண்டைய மரபு தான். இடைக்காலத்தில் பரம்பொருளைக் குழந்தை யாகக் கருதிப் பிள்ளைத் தமிழ் பாடுகின்ற மரபும் தோன்றிற்று. இருபதாம் நூற்றாண்டு வரையில் இந்த இரண்டு முறைகள் தவிர வேறு புது வழி வகுப்பார் எவரும் இலர். ஆனால், கடவுளைத் தாயாய், தந்தையாய், தோழனாய், அரசனாய், சற்குருவாய், காதலனாய்,காந்தனாய். ஆண்டானாய்ப் பாரதியார் பாடியிருக்கின்ற புதுமைகள் ஒருபுறமிருக்கபண்டைக் கவிஞர்கள் கினைத்துப் பார்ப்பதற்கும் அஞ்சுகின்ற முறையில் கண்ணனைச் சீடனாய், சேவகனாய், காதலியாகவும் வைத்துப் பாடிய பெருமை பாரதிக்கே உரியது.

கற்பனை கடந்து நிற்கின்ற பரம்பொருளின் உயர்வற உயர்ந்திருக்கின்ற நலத்தை நன்கு அறிந்த வர்களேயாயினும் நம்முடைய முன்னோர்கள் இத்துணை உயர்ந்த பரம்பொருள். அடியவர்களைப் பொறுத்தமட்டில் எளிவந்த தன்மையுடையது என்ற கருத்தைப் பேசியும் சொல்லியும் வந்துள்ளனர். காட்டில் வாழும் யானை ஒன்றின் பொருட்டாகப் பரம்பொருள் இரங்கி இறங்கி வந்தது என்று வரலாறு வகுக்கும்பொழுது இறைவனுடைய எளிமைக்கு (செளலப்பியத்திற்கு) ஒர் எல்லை வகுப்ப தாக அக் குறிப்பு அமைகிறது. இந்த அளவுக்கு எளிவந்த தன்மையைப் பேசிய பிறகு அப்படி வருகின்ற