பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இ. அ. ச. ஞானசம்பக்தன்

பொருளை ஏன் சீடனாக, சேவகனாக, காதலியாகக் கொள்ளக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் அகங்கார, மகங்காரங்களை விட்ட ஓர் ஆன்மா, பரம்பொருளோடு ஒன்றியிருக்கின்ற இயல்பைப் பெற்று விடுகிறது; ஆதலில் இவ்விரண்டின் இடையே சேவகன் என்றோ சீடன் என்றோ காதலி என்றோ ஓர் உறவு முறையைக் கற்பிப்பதில் தவறு ஒன்று மில்லை. பல துறைகளில் புது வழி வகுத்த கவிஞர் இத்துறையிலும் புது வழி வகுக்கின்றார். என்றாலும், பழமையை மறவாமல் பாடுகின்ற இயல்பையும் காண முடிகின்றது. கண்ணன் என் தோழன் என்ற பகுதியில், வள்ளுவப் பெருந்தகை நட்பிற்குக் கூறிய இலக்கணம் அனைத்தையும் மனத்தில் கொண்ட கவிஞர்

பாடலை இயற்றுகிறார்:

நெஞ்சம் ஈனக் கவலைகள் எய்திடும்போதில் இதம் சொல்லி மாற்றிடுவான் உழைக்கும்வழி, வினையாளும்வழி, பயன் உண்ணும்வழி உரைப்பான் உள்ளத்தி லேகருவம் கொண்டபோதினில் ஓங்கி அடித்திடுவான் - கெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னால் அங்குக் காரி உமிழ்ந்திடுவான்

நட்பிற்கு இலக்கணம் கூறும்பொழுது- நட்புப் பொழுதுபோக்குவதற்கு அன்று; தவறு நிகழ்கின்ற காலத்தில் இடித்துச் சொல்வதற்கே ஆகும் என்ற கருத்தில், -