பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 7t

நகுதற் பொருட்டன்று கட்டல் மிகுதிக்கன் மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்று பொதுமறை பேசிச்செல்வதை இப் பாடலில் காண்கின்றோம். இதனை யடுத்துக் கண்ணன் என் சீடன் என்ற பகுதியில் கவிஞனின் சுயசரிதத்தை, அவனுடைய வளர்ச்சி முறையை ஒரளவு காண முடிகின்றது: k

உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும் தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும் தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் உற்றிடேன் இந்தச் சகத்திலே யுள்ள மாந்தர்க் குற்ற துயரெலா மாற்றி இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்குஎனைத் தண்டனை புரிந்திடத் தர்னுளங் கொண்டு மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும், பலவகை யால் அகப் பற்றுறச் செய்தான்.

இங்ங்னம் தன்மாட்டு உள்ள குறைகளை அறிந்து கொள்ளாத குரு ஒருவன் உலகத்தையெல்லாம் சீர்திருத்தி நிலை நிறுத்திவிட வேண்டுமென்ற நினைவில் ஆழ்ந்து தன் மாட்டுக் கழிவிரக்கம் கொண்டு தன்னையே திருத்திக் கொள்ள வேண்டிய ஒருவன் அவற்றையெல்லாம் மறந்து தான் ஒரு சீடனைத் தகைமை சால் கவிஞனாக ஆக்க முற்படுகின்ற அவலக் கதைதான் கண்ணன் என் சீடன்' என்ற பகுதி