பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 0 அ. ச. ஞானசம்பந்தன்

யாகும். குரு சொல்லிய எந்த ஒன்றையும் சீடன் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்ற நிலை வரும்பொழுது சீடன்மாட்டு ஆசிரியனுக்குச் சினம் பிறக்கின்றது. ஆனால், அந்தச் சினத்தின் அடிப்படை யைப் பார்க்கும்பொழுது உண்மை விளங்கி விடுகிறது. சீடன் திருந்தவில்லையே என்ற காரணத்தால் ஆசிரியனுக்குச் சினம் தோன்றுமேயானால், அதில் மனக் காழ்ப்புத் தோன்ற வழியில்லை. அதன் எதிராகத் தான் சொல்லியதைச் சீடன் கேட்கவில்லை என்பதனால் சினம் தோன்றினால் அச் சினத்தின் அடிப்படையில் சீடனுக்கு நன்மையில்லை. அதன் எதிராகத் தன்னுடைய அகங்காரம் அழிந்து விடுவதைக் கண்ட கவலை தான் ஆசிரியனுக்குப் பிறக்கின்றது. இக் கருத்தைத்தான் கவிஞர்,

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுறை யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும் கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்

என்று பேசுகிறான். ஆசிரியரின் 'முயற்சிகள் அனைத்தும் தோற்று இறுதியில் தன்னைத் தான் மறக்கின்ற அளவுக்கு அகங்காரம் விசுவரூபம் எடுத்ததன் பயனாய்ச் -

சீச்சீ பேயே சிறிதுபோழ் தேனும் இனி என் முகத்தின் எதிர்கின் றிடாதே, யோபோ

என்று இடிபோல் பேசவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. மாயக் கண்ணன் ஒரு சிறிதும் க்வலைப்படாமல்