பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் ே 73

புறப்பட்டுப் போய்விட்டான். தன் பெருமையை அறிந்த சீடன், தான் இவ்வாறு பேசியவுடன் மீண்டு விடுவான் என்று நினைக்கின்றது, அகங்காரம். ஆசிரியன் எதிர்பாராத வகையில் சீடன் புறப்பட்டுப் போய்விட்டர்ன் என்பதைக் கண்டவுடன் அகந்தை முற்றும் அழிந்த ஆசிரியன் கீழ்வருமாறு பேசுகிறான்:

மகனே, போகுதி, வாழ்கt, கின்னைத் தேவர் காத்திடுக நின்றனைச் செம்மை செய்திடக் கருதி ஏதெதோ செய்தேன். தோற்றுவிட் டேனடா சூழ்ச்சிக ளழிந்தேன் மறித்தினி வாராய், செலுத்தி, வர்ழி ே எனத் துயர் நீங்கி, அமைதியோ டிசைத்தேன்.

இம்முறையில் அகந்தை முற்றிலும் அழிந்தவுடன் ஆசிரியன் அமர வாழ்வு பெறுகின்றான். இப்படி யான், எனது என்பது அற்றவிடத்தில் மோன வடிவான இறைவன் தோன்றுவான் என்பதை இறுதி அடிகள் தெரிவிக்கின்றன:

சென்றனன் கண்ணன், திரும்பியோர் கணத்தே எங்கிருந் தோகல் லெழுதுகோல் கொணர்ந்தான்; காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான் - "ஐயனே, கின்வழி யனைத்தையும் கொள்வேன். தொழில்பல យុវើGលលំ, துன்பமிங்கென்றும் இனிகினக் கென்னால் எய்திடா" தெனப்பல நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான். மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன் கெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்;