பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இ. அ. ச. ஞானசம்பகதன்

'மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல்

அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்; தோற்றே னெனt உரைத்திடு பொழுதிலே வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம் ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்கங்" என்றான் வாழ்கமற் றவன்ே

இவ் உலகம் தோன்றிய நாள் தொட்டு மக்கள் எத்தனையோ புதுமைகளைக் கண்டு மனம் மறுகு கின்றனர். அவற்றுள் ஒன்று ஆண்டவனை நம்பி யிருப்பவர்கள் அவதிப்படுவதும், 'கடவுளாவது கத்திரிக்காயாவது' என்று பேசுபவர்கள் வளமாக இருப்பதுமாகும். உலகில் என்றுமே உள்ள இந்தப் புதுமையைக் கண்டு எல்லாக் காலத்திலுமுள்ள பெரியவர், நடு வயதினர், சிறுவர் ஆகிய அனைவருமே. வியப்பு அடைந்திருக்கின்றனர். மிகத் தொண்டு கிழவராகிய திருநாவுக்கரசர் இந்தப் புதுமை"யை நினைந்து,

'கிணைந்து உருகும் அடியாரை கையவைத்தார்

கில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்"

என்று பாடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப் பெருங் கிழவரின் பின்னர் எட்டாம் நூற்றாண் டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த பச்சிளங் குழந்தை யாகிய நம்மாழ்வார்,

கண்ணாதார் முறுவலிப்ப கல்லுற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர்விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை?

என்று பாடிச் செல்கிறார். எனவே, மிகப் பெரிய கிழவருக்கும் மிகச் சிறிய குழந்தைக்கும் இப் புதுமை’