பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 75

வியப்பை உண்டாக்குகிறது. இறைவனை முழுவது: மாக நம்பி, "நீயே சரணம்' என்று சொல்லுகின்ற். அடியார்கள் மனம் நைந்து உருகும்படியான அளவு சோதனை செய்யப்படுகிறார்கள் என்று பேசுகின்ற கருத்தைத்தான் இந்த இரண்டு பெருமக்களும் கூறி யுள்ளனர். நம்முடைய காலத்தில் வாழ்ந்தவராகிய பார்தியாரும் இந்த உலகியல் நடைமுறையைக் கண்டு. வியப்பு அடைகிறார். கண்ணன் என் தந்தை' என்ற பகுதியில் கீழ்வருமாறு பாடுகிறார்:

பல்வகை மாண்பி னிடையே- கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு; நல்வழி செல்லு பவரை- மனம் கையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு.

இந்த முன்று பெருமக்களும் கூறியதைப் பார்க்கும் பொழுது நம்முடைய மனத்தில் ஒரோவழித் தோன்று: கின்ற ஐயம் பெரியதாக வளர்ந்து, ஆண்டவனைச் சரண் அடைவதைக் காட்டிலும், வேண்டாமென்று ஒதுக்கியிருப்பதே மேலான வாழ்க்கை போலும் என்று நினைக்கத் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஐயத்தைப் போக்கும் முறையில்தான் திருநாவுக்கரசர் தம் பாடலில் முதல் அடியில் இந்த வினாவை எழுப்பி, இரண்டாவது அடியில் அத்ற்குரிய விடையையும் பகர்கின்றார். இத்தகைய பெருந்துயரம் ஏன் தோன்றுகிறது என்றால், அடியார்களுடைய வினை யைப் போக்குவதற்கே துன்பங்கள் தரப்படுகின்றன என்று இறைவனுடைய மறக்கருணை பற்றிப் பேசப் பெறுகிறது. இக்கருத்தையும் பாரதி நன்கு அறிந்திருக் கிறார் என்பதை அறிய முடிகிறது.