பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ), அ. ச. ஞானசம்பந்தன்

பாரதி கவிதைகளில் தனியே நின்று சிறப்புப் பெறுகின்ற பெருமையுடைய பகுதி "பாஞ்சாலி சபதம் பெருங்காப்பியம் பாட வாய்ப்பு இல்லாத கவிஞர் "பாஞ்சாலி சபதம் ஆகிய காப்பியத் துணுக்கு ஒன்றைப் பாட முனைகின்றார். பெருங்காப்பியத் தில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு "பாஞ்சாலி சபதம்' என்ற பகுதியில் ஒரு காப்பியத் துணுக்கை இணைக்கின்றார்.

பாரத சமுதாயத்தில் இராமாயணம், பாரதம் என்ற இரண்டு. இதிகாசங்களும் பரவலாகப் பயிலப் பட்டு இருந்தவைதாம். பழைய சங்கப் பாடல்களிலும் இந்த இரண்டு கதைகளும் ஒரளவு பேசப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் பாரதத்தைவிட இராமகாதையில்- அதிலும் கம்பனுடைய இராம காதையில்- கவிஞர் பெரிதும் ஈடுபட்டவர். "யாம் அறிந்த புலவரிலே’ என்ற பாடலில் கம்பனுக்கு ஒர் இடம் கொடுத்திருக்கிறார் என்பதையும், கம்ப ராமாயணத்தின் உட்பொருளைப் பலரும் அறியாத முறையில் அறிந்த கம்பனுடைய குறிக்கோளே மானிடத்தின் சிறப்பைப் பாடுவதுதான் என்ற பெருண்மையை உணர்ந்து கம்பனுக்கு ஒரு பட்டம் கொடுக்க விரும்பிய பாரதியார் ஏனையோர்போல் கவிச் சக்கரவர்த்தி என்று பழைய பட்டத்தைத் தாராமல் இன்றும் நாம் நினைந்து வியக்கின்ற ஒர் அற்புதப் பட்டத்தைக் கம்பனுக்கு வழங்கியிருக்கிறார் என்பதையும் அறிதல் வேண்டும். 'கம்பன் என்று ஒரு மானுடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும்' என்ற அடியில் 'மானுடன் என்ற சொல்லை ஒப்பற்ற முறையில் பொருள் ஆழத்துடன்