பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் ை77

பயன்படுத்திச் செல்கிறார். கவிச் சக்கரவர்த்தி கம்ப. நாடன் வேறு உள குழுவை யெல்லாம் மானுடம், வென்றதம்மா’ என்று பாடி மனிதத் தன்மை, தெய்வத் தன்மையை அடுத்து நிற்பதாகும் என்ற. பெருண்மையை விளக்கியுள்ளார். கம்பனுடைய இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்த பாரதி மானிடத்தின் பெருமை பேசிய கம்பனை மானுடன் என்றே அழைத்து மகிழ்கின்றார். இவ்வளவு தூரம் கம்பனில் ஈடுபட்ட பாரதியார் அந்தக் கம்பனிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு தம்முடைய காப்பியத் துணுக்கைப் பாடாமல் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக் கொண்டதில் அவருடைய மனப்போக்கை நாம் அறிய, முடிகிறது.

பாரதியார் காலத்தில் வெள்ளையர்களாலும் சுதேச சமஸ்தான மன்னர்களாலும், அடிமைப் புத்தி படைத்த நம்மவர்களாலும் துகில் உரிந்து: மானபங்கம் செய்யப் பெறுகின்ற நிலையில் பாரதத் தாய் இருந்தாள். அவளுடைய ஆறாத் துயரத்தைப், பெருகுகின்ற கண்ணின்ரத் துடைக்க யாரும் முன் வரவில்லை. முப்பது கோடிப் பிள்ளைகளைப் பெற்ற அப் பெருமாட்டியின் துயர் துடைக்க யாரும் வாராத கொடுமையை நினைக்கின்றார் கவிஞர். அவர்களுள் அறிவுடையோர், வீரம் உடையோர், மானம் உடையோர், பகையினை வெல்லும் பண்புடையோர் இல்லாமல் போய்விட்டார்களோ- இருந்தால் அவர்கள் வாய் மூடியிருப்பதன் தத்துவம் என்ன என்ற வினாக்கள் கவிஞரின் உள்ளத்தில் தீயாகச் சுடுகின்றன. இத்தகையதொரு கொடுமை இதற்கு, முன்னர் எங்கேனும் நடந்தது உண்டா என்று அவர்

ur– 6