பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அ. ச. ஞானசம்பந்தன்

மனம் சிந்திக்கின்றது. ஆம்; இணையற்ற வீரர்களை, உலகம் போற்றும் உத்தமர்களை, நீதி நெறி தவறாத நேர்மையாளர்களைக் கணவர்களாகப் பெற்றிருந்தும் ஒரு பெருமாட்டி இதேபோல் பண்டைய காலத்தில் அல்லலுற்றாள். இந்த ஒருமை காரணமாக இதிகாசங்களில் வரும் பாஞ்சாலியின் நினைவு கவிஞனுக்கு வருகின்றது. நாட்டு வளங்கள் அனைத்தும் நிறைந்த இந்தப் பாரத தேவி, பெண் நலம் அனைத்திற்கும் கொள்கலமாக உள்ள பாஞ்சாலியை நினைவூட்டுகிறாள். லஜபதிராய், திலகர், மகாத்மா போன்ற வீரர்கள் தாயின் துயர் துடைக்க நிற்பதைப்போலப் பாஞ்சாலியின் கணவர் களும் அவள் துயர் துடைக்க நிற்கின்றனர். துச்சாதனன் உரிகின்ற துகிலைப்போல் வெள்ளை யர்கள் இப் பாரதத் தாயின் பண்பைக் குலைத்து அவளுடைய உயிர்ச் சத்தைச் சுரண்டிக் கொண்டு இருக்கின்றார்கள். மேலே கூறிய மகாத்மா போன்ற வீரர்கள் ஒருசிலரைத் தவிர, முப்பது கோடி மக்களும் ஆட்டு மந்தைகள்போல் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இயல்பு, துரியோதனன் அவையில் கங்கை மகன் (பீஷ்மர்) போன்றவர்கள் வாய்மூடி மெளனியாக இருந்த நிலையை நினைவூட்டு .கின்றன. . -

சுதேச மன்னர்கள் என்ற பெயரில் இருந்த சிலர் தங்களால் ஆளப் பெறுகின்றவர்கள் தங்களைப் போன்ற மனிதர்களே என்ற நினைவுகூட இல்லாமல் மக்கள் பட்டினியால் வருந்திச் சாகின்ற கொடுமை யான சூழ்நிலையில் தங்களால் வளர்க்கப்படுகின்ற :காய்களுக்குத் திருமண விழாக் கொண்டாடி