பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் கு 79

அவற்றுக்காக லட்சக்கணக்கில் ரூபாய் செலவழிக் கின்ற வீணர்களைச் 'சுதேச மன்னர்களாகப் பெற்றிருந்த கொடுமையைக் கவிஞர் காண்கின்றார். அவரையும் அறியாமல் உள்ளம் கொதிக்கின்றது. அவருடைய சினம் முழுவதும் கொட்டித் தீர்ப்பதற் குரிய கொள்கலமாகப் பாஞ்சாலி சபதம் அமை கின்றது. பழைய வியாசனும் புதிய வில்லிபுத்துாரா லும் ஒருசில வரிகளில் பாடிச் சென்ற பாஞ்சாலியின் துயரம் ஒரு பெரிய காப்பியத் துணுக்காகக் கவிஞரிடம் முகிழ்கிறது. பழைய கதையைப் பாடிச் சென்றாலும் ஓர் உள்ளுறை கதையாகக் (allegory) கவிஞர் இதனை அமைக்கின்றார். காப்பியம் பாடி வருகின்ற கவிஞர் பாத்திரங்களைப் பேச விடல் வேண்டும்; நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்திச் சொல்ல வேண்டும்- என்ற இரண்டு நிலை போகத் தம்முடைய கருத்தைச் சொல்லப் புகுந்து மற்றொன்றை விரித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பதனைப் பாரதியார் அறியாதவர் அல்லர். என்றாலும், எத்தனையோ இட்ங்களில் தம்மையும் மறந்து ஆறாத்துயரில் ஆழ்ந்து பாஞ்சாலியை மற்ந்து பாரத தேசத்தை நினைந்து பாடத் தொடங்கி விடுகிறார். எனவே, தருமன் நாட்டை வைத்துச் சூதாடித் தோற்றான் என்று சொல்ல வந்த கவிஞர், அந்தக் கொடுமையைப் பேசிய பிறகு அவன் காலத்தில் வாழ்ந்த அரசர்களின் போக்கை இடித்துப் பேசுகிறார்:

கோயிற் பூசை செய்வோர்- சில்ையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து கிற்போன்- வீட்டை