பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இ. அ. ச. ஞானசம்பந்தன்

வைத்திழத்தல் போலும் ஆயிரங்க ளான- திே யவையுணர்ந்த தருமன் தேயம் வைத் திழந்தான்;- சீச்சீ சிறியர் செய்கை செய்தான்.

நாட்டு மாந்த ரெல்லாம்- தம்போல் நரர்க ளென்று கருதார்; ஆட்டு மங்தை யாமென்- றுலகை அரச ரெண்ணி விட்டார். காட்டு முண்மை நூல்கள்- பலதாங் காட்டினார்க ளேனும், - நாட்டு ராஜ நீதி- மனிதர்

கன்கு செய்ய வில்லை.

பாரதியின் நாட்டுப் பற்று- நாட்டின் நலனைக் கவனியாதவர் மாட்டு அவர் கொண்ட அலட்சியம்நாட்டுக்குத் தீங்கிழைப்பார்மாட்டு அவர் கொள்ளும் சீற்றம்- கடமை மறக்கும் ஆட்சியாளரை அவர் சாடுகின்ற திறம் ஆகிய அனைத்தும் சிறந்த கவிதை. வடிவில் அமைந்திருப்பது பாஞ்சாலி சபதம்.

இவற்றையல்லாமல் தனிப்பாடல்கள் என்ற பெயரிலும் பல பாடல்களைப் பாரதி பாடியிருக். கிறார். நல்ல கற்பனைவளம், சொல்லாட்சி முதலிய வற்றுக்கு இவருடைய பாடல்கள் அனைத்துமே. சான்றாக நிற்பினும், தனிப்பாடல்களுள் கவிதா தேவி அருள் வேண்டல்', 'அந்திப் பொழுது முதலிய பகுதிகளில் மிகச் சிறந்த பாடல்களைப் பாடியிருக். கின்றார். - - -